MAHALAYA

MAHALAYAM

மஹாளயம்/பித்ரு பக்ஷம் கேள்வி பதில்கள் - பாகம் 3

இது அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளுக்கான 3ம் பாகம்.

கேள்வி 1: மஹாளயத்தில் அமாவாசை தர்பணம் செய்தபிறகு மஹாளய தர்பணமும் செய்யவேண்டுமா?

பதில் 1: இதில் இரண்டு முறைகள் மட்டுமே உள்ளது. ஒன்று அனைத்து 16 நாட்களும் மஹாளய தர்பணம் செய்யவேண்டும் அல்லது ஏதாவது ஒரு நாள் மட்டும் செய்யவேண்டும் (அ) நீங்கள் 16 நாட்கள் பக்ஷ மஹாளய தர்பணம் தினமும் செய்வீர்களானால் அமாவாசை அன்றும் மஹாளய தர்பணம் செய்யவேண்டும். ஆகவே உங்களுக்கு இரண்டு தர்பணம் - ஒன்று மாதம் ஒரு முறை செய்யும் அமாவாசை தர்பணம் , மற்றொன்று 16 நாட்கள் செய்யும் மஹாளய தர்பணம். (ஆ)ஆனால் நீங்கள் ஒரே ஒரு நாள் ஹிரண்ய மஹாளய ஷ்ராத்தமும் தர்பணமும் செய்து இருந்தால், அமாவாசை அன்று மஹாளய தர்பணம் செய்யவேண்டாம். அமாவாசை தர்பணம் மட்டும் செய்தால் போதுமானது. பித்ருக்களையும் காருணிக பித்ருக்களையும் த்ருப்தி படுத்த ஒரு ஷ்ராத்தமும் ஒரு தர்பணமும் மஹாளயத்தில் செய்தால் அது முழு பக்ஷத்தில் செய்த பலனை அடைய தகுதி பெற்றுவிடும் என விதிக்கபட்டுள்ளது. ஆனால் மஹாளயத்தில் சில நாட்களை மட்டும் தேர்தெடுத்து தர்பணம் செய்வது கூடாது. சிலர் மூன்று அல்லது நான்கு நாட்கள் மட்டும் தேர்தெடுத்து தர்பணம் செய்வதை பழக்கமாக வைத்து கொண்டிருக்கிறார்கள். இது சாஸ்த்திரபடி தவறாகும். ஒன்று பக்ஷத்தில் அனைத்து நாட்களும் செய்யவேண்டும் அல்லது சகருன்மஹாளய என்று ஒரு நாள் செய்யவேண்டும்.

கேள்வி 2: நான் 16 நாட்கள் பக்ஷ மஹாளய தர்பணம் செய்வதால் பதில் 1ல் சொல்லியபடி அமாவாசை அன்று 2 தர்பணங்கள் செய்யவேண்டுமா? நான் எந்த தர்பணத்தை முதலிலும் எதை இரண்டாவதாகவும் செய்யவேண்டும்?

பதில் 2: முதலில் அமாவாசை தர்பணமும் அதன் பின் மஹாளய தர்பணமும் செய்யவேண்டும்.

கேள்வி 3: அமாவாசை பித்ரு கார்யங்களுடன் தொடர்பு உடையதால் சக்ருன் மஹாளய ஹிரணய ஷராத்தம் அமாவாசை திதி அன்று நானே தேர்ந்து எடுத்து செய்யலாமா?

பதில் 3: மஹாளயத்தில் உள்ள அமாவாசை திதி குழந்தை இல்லாதவர்கள், விதவை, மனைவியை இழந்தவன் மற்றும் ப்ரஹ்மசாரிகள் ஆகிய இந்த நான்கு வகைகாரர்களுக்கு மட்டும் ஒதுக்கபட்டுள்ளது. இந்த நாலு வகையை சார்ந்தவர்கள் அமாவாசை அன்று மஹாளய ஹிரண்ய ஷராத்தம் செய்யலாம். மற்றவர்கள் செய்யகூடாது.

கேள்வி 4: என்னுடைய தாய்/தந்தையின் ஷராத்தம் மஹாளய பக்ஷ மாதத்தில் வருகிறது (புரட்டாசி/கன்யா மாதம்/பத்ரபாதா). நான் இந்த 16 நாட்களில் ஏதாவது ஒரு நாளில் மஹாளய ஷ்ராத்தம் செய்துவிட்டு, பின்பு வருஷ ஷ்ராத்தம் மஹாளயத்தில் வரும் அவர்களின் திதியில் செய்யலாமா?

பதில் 4: தங்களின் பெற்றொரின் வருஷ ஷ்ராத்தம் மஹாளய மாதத்தில் ஏதாவது ஒரு நாளில் வந்தால் , வருஷ ஷ்ராத்தம் செய்வதற்கு முன்னால் சக்ருன் மஹாளய ஷ்ராத்தம் செய்யகூடாது.. முதலில் வருஷ ஷ்ராத்தம் செய்தபின்தான் சக்ருன் மஹாளய ஷ்ராத்தம் செய்யவேண்டும்.

கேள்வி 5: மேற்கூறிய பதிலின்படி என்னுடைய பெற்றொரின் வருஷ திதி மஹாளய பக்ஷமான கன்யா மாசம்/புரட்டாசி மாதம் வரும்பொழுது ஒரு வேளை மஹாளய பக்ஷம் முடிந்து விட்டால் நான் மஹாளய பக்ஷத்தை தவற விடுவேன் இல்லையா?

பதில் 5: இல்லை. நமது ரிஷிகள் மிகவும் கருணையானவர்களாதலால் அனைத்திற்கும் பதில் வைத்திருக்கிறார்கள். தர்ம ஸாஸ்த்திரங்கள் மஹாளயம் செய்வதற்கு மற்றுமொரு காலமான அடுத்து வரும் மாதத்தில் உள்ள கிருஷ்ண பக்ஷத்தில் செய்யலாம் என்று கொடுத்துஇருக்கிறார்கள். மஹாளயம்/பித்ரு பக்ஷம் – அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் - பாகம் 2ல் விவரமாக கொடுக்கபட்டுள்ளது.

கேள்வி 6: என்னுடைய தந்தை வாழ்க்கையின் பிற்பகுதியில் சன்யாஸம் வாங்கிகொண்டார். அவர் சஷ்தி திதி (வேறு எந்த திதியாகவும் இருக்கலாம்) நான் அவருக்கு சஷ்டி திதி அன்று சக்ருன் மஹாளய ஷ்ராத்தம் செய்யலாமா?

பதில் 6: இல்லை. செய்யகூடாது. சன்யாஸம் பெற்று மரணமடைந்தவர்களுக்கு த்வாதசி திதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆகையால் நீங்கள் உங்கள் தந்தைக்கு த்வாதசி திதி அன்றுதான் ஷராத்தம் செய்யவேண்டும்.

கேள்வி 7: என் தந்தை சன்யாஸம் எடுக்காத பட்சத்தில், த்வாதசியில் இறந்துபோயிருந்தால் சக்ருன் மஹாளய ஷ்ராத்தமும் தர்பணமும் அன்று செய்யலாமா?

பதில் 7: ஆமாம். செய்யலாம். இந்த விதியான த்வாதசியில் மட்டும் செய்வது சன்யாசிகளுக்கு மட்டும் பொருந்தும். சன்யாசி அல்லாதவர்கள், மற்ற திதியில் இறந்து இறந்துபோயிருந்தாலும், துவாதசியில் இறந்துபோயிருந்தாலும், துவாதசியில் செய்யலாம்.

கேள்வி 8: மஹாளய பக்ஷத்தில் கடைபிடிக்க ஏதாவது முக்கியமான விதிகள் இருக்கிறதா?

பதில் 8: மஹாளய பக்ஷத்தில் முடி திருத்தவோ, க்ஷவரம் செய்வதும் கூடாது. எண்ணை தேய்த்து குளிக்கக்கூடாது. ப்ரம்ஹசர்யம் கடைபிடிக்கவேண்டும். ஸாஸ்திரபடி, வெங்காயம், பூண்டு வகைகளை அறவே தவிர்க்கவேண்டும் என்றபோதிலும், இந்த 16 நாட்கள் நிச்சயம் தவிர்க்கவேண்டும்

கேள்வி 9: மேற்கூறிய விதிகள் என் தாத்தாவுக்கு (தந்தையின் தந்தை) மஹாளயஷ்ராத்தம் செய்யும் என் தந்தைக்கு மட்டும் உள்ளதா அல்லது நானும் கடைபிடிக்கவேண்டுமா?

பதில் 9: எப்படி வீட்டில் உள்ள திருவிழாக்கள், கொண்டாட்டங்கள் எல்லோருக்கும் பொதுவோ நீங்கள் அதே வீட்டில் வசிக்கும் பட்சத்தில் நீங்களும் கடைபிடிக்கவேண்டும். உங்களின் தந்தை பக்தியுடன் தர்பணம் , ஷராத்தம் செய்யும்பொழுது, நீங்கள் உங்கள் மனம் போல தவறாகும் என்பதை யோசிக்கவேண்டும்.

கேள்வி 10: என் தாய் உயிரோடு இருக்கிறார்கள் என் இறந்த தந்தைக்கு ஷ்ராத்தம் /தர்பணம் செய்துகொண்டு இருக்கிறேன். என்னுடைய இறந்து போன தாய் வர்க்கத்து மூதாதையர்களுக்கு என்ன செய்வது?

பதில் 10: உங்கள் காலமாகிய தந்தைக்கு தர்பணம் செய்யும்பொழுது நீங்கள் அவரின் தந்தை (உங்களுடைய தாத்தா) அவர் தந்தையின் தந்தை (உங்களுடைய கொள்ளு தாத்தா) ஆகியோர்க்கு தர்பணம் செய்கிறீர்கள். உதாரணமாக, தாய் உயிரோடு இல்லையெனில், உங்கள் தாய், தாயின் மாமியார் (உங்கள் பாட்டி) மாமியாரின் மாமியார் (பெரிய மாமியார்) (உங்கள் கொள்ளு பாட்டி) ஆகியோருக்கு தர்பணம் செய்வீர்கள். இங்கு ஸாஸ்திரங்கள் இரண்டு முறைகள் தந்துள்ளது. ஒன்று தாய் உயிரோடு இருப்பதால், தாயின் பெரிய மாமியாரின் அம்மாவையும் சேர்த்து 3 தலைமுறை மாமியார்களுக்கும் தர்பணம் செய்யலாம். அல்லது, தாய் உயிருடன் இருக்கும்வரை தாய் வர்கத்திற்கு தர்பணம் செய்யவேண்டியதில்லை. இரண்டு முறைகளும் அனுமதிக்கப்பட்டுள்ளது.

கேள்வி 11: பித்ரு தர்பணம் செய்யும்பொழுது பூணூலை இடது பக்கமாக (ப்ராசீநாவீதி) மாற்றிகொள்ள வேண்டும். சில சமயத்தில் அப்படி செய்ய மறந்துவிட்டு உபவீதியாகவே போட்டுகொண்டு தர்பணம் செய்துவிட்டால் என்ன செய்வது?

பதில் 11: நீங்கள் அனைத்து தர்பணத்தையும் மறுபடியும் ஆரம்பிக்கவேண்டும். பித்ரு பக்ஷத்தில் ப்ராஹ்மணர்கள் உங்கள் இல்லத்திற்கு ஹிரண்ய ஷ்ராத்ததிற்கு வரும்பொழுது அரிசி, வாழைக்காய், பருப்பு வகைகளை ப்ராஹ்மணர்களுக்கு கொடுக்கும்பொழுதும் இதே முறையைதான் கடைபிடிக்கவேண்டும்.

கேள்வி 12: அதிக மடிக்காக ஈர பஞ்சகச்சம் /வேஷ்டி உடுத்திகொண்டு தர்பணம் பண்ணலாமா?

பதில் 12: ஈர துணிகளை கட்டிகொண்டு ஷராத்தம்/தர்பணம் செய்வது ஸாஸ்திரத்திற்கு எதிரானது. அதேபோல், ஒற்றை வஸ்திரம் உடுத்திகொண்டு ஷ்ராத்தம்/தர்பணம் செய்வதும் கூடாது. இதனால் பஞ்சகச்சம்/வேஷ்டியுடன் அங்கவஸ்திரம்/உத்தரீயம் இடுப்பில் எப்பொழுதும் கட்டி இருக்கவேண்டும். சுருக்கமாக, அனைத்து தேவ மற்றும் பித்ரு கர்மாக்களுக்கு 2 வஸ்த்திரங்கள் அவசியம்.

கேள்வி 13: மஹாளயம் செய்வது எங்கள் குடும்ப வழக்கத்தில் இல்லை என்று என்னுடைய வீட்டில் சொல்லுகிறார்கள். ஆகவே எங்கள் முன்னோர்கள் செய்யாததை செய்யவேண்டாம் என அபிப்ராயம் இருக்கிறது. இது சரியா?

பதில் 13: இது யாருமே சொல்ல கூடாத மிகுந்த வருந்ததக்க விஷயமாகும். எல்லா ஜாதியிலுள்ள ஒவ்வொருவரும் மஹாளயம் செய்து வாழ்க்கையில் நல்ல ஆயுள், ஆரோக்யம், செல்வம், குழந்தைகள் பெற பித்ருக்களின் ஆசிர்வாதத்தை பெறவேண்டும் என்று ஸாஸ்திரங்கள் வலியுருத்துகின்றன.மஹாளயம் செய்யாமல் போனால் அதனால் பித்ரு தோஷங்களுக்கு ஆளாகி வாழ்க்கையை பாதகமாக்கிவிடும். எல்லா நாட்களும் செய்யமுடியாவிட்டால் மஹாளயத்தில் ஏதாவது ஒரு நாளாவது சக்ருன் மஹாளய ஷ்ராத்தம் நிச்சயம் செய்யவேண்டும்

கேள்வி 14: திட்டமிட்டபடி ஒரு குறிப்பிட்ட திதியில் மஹாளய பக்ஷம் ஏதோ காரணமாக ( ஸாஸ்த்ரிகள்வரவில்லை அல்லது சில அவசர காரியம்) செய்யமுடியாமல் போய்விட்டால் என்ன செய்வது?

பதில் 14: கடைசி சமயத்தில் ஏதாவது காரணங்களினால் மஹாளய ஷ்ராத்தம் செய்ய முடியவில்லை எனில் மஹாளய அமாவாசை முடிந்து வரும் ஐப்பசி /துலா/அஷ்வினா மாதத்தில் முதல் 5 நாட்களில் (அதாவது, ப்ரதமை முதல் பஞ்சமி வரை) செய்யலாம்.

கேள்வி 15: மஹாளய ஷ்ராத்ததிற்கு எவ்வளவு தஷிணை ப்ரஹ்மணர்களுக்கு தரவேண்டும்?

பதில் 15: மஹாளயத்தில் பார்வண ஷ்ராத்தம் (ஹோமமும் ப்ரஹ்மண போஜனமும்) (நமது வருஷ ஷ்ராத்தம் போல) செய்யவேண்டும் என்று ஸாஸ்திரங்கள் போதிக்கின்றன., ஹோமம், போஜனம் இல்லாமல் அரிசி, வாழைக்காய், பருப்பு கொடுத்து சுருக்கமாக ஹிரண்ய ஷ்ராத்தம் செய்யும் பக்ஷத்தில் பார்வண ஷ்ராத்ததில் கொடுக்கும் தக்ஷினை போல 4 மடங்கு தரவேண்டும். “ஹிரண்யா”என்றால் “தங்கம்” என்று அர்த்தம். ஆகையால் சுருக்கமாக செய்வதால் தக்ஷினையாக தங்கம் கொடுக்கவேண்டும். சுருக்குவழிக்கு எப்பொழுதுமே அதிக விலை கொடுக்கவேண்டும். உதாரணமாக, கோவில்களில் நேரத்தை சேமிக்க சிறப்பு தரிசனத்திற்கு அதிக பணம் கொடுக்கவேண்டும். குறைந்த நேரம் அதிக விலை.

கேள்வி 16: தர்பணத்தில் காருணிக பித்ருக்களுக்கு தனியாக கூர்ச்சம்/புக்னம்/தர்பஸ்தம்பம் வைக்கவேண்டுமா?

பதில் 16: ஆமாம். காருணிக பித்ருக்களுக்கு தனியாக கூர்ச்சம் வைக்கவேண்டும். நீங்கள் அமவாசைக்கு ஒரு கூர்ச்சம் வைத்தால் மஹாலயத்திற்கு 2 கூர்ச்சம் வைக்கவேண்டும் என்பது முறை. ஒன்று உங்களுடைய தந்தை/தாய் வர்கத்து பித்ருக்களுக்கு, மற்றொன்று காருணிக பித்ருக்களுக்கு என்பது முறை. நீங்கள் அமாவசைக்கு தந்தை வர்கத்திற்கு ஒன்று, தாய் வர்கத்திற்கு ஒன்று என கூர்ச்சம் வைத்தால், மஹாளய தர்பணத்திற்கு காருணிக பித்ருக்களுக்காக மேலும் ஒரு கூர்ச்சத்தை சேர்த்து 3 கூர்ச்சமாக வைக்கவேண்டும்.

கேள்வி 17: காருணிக பித்ருகளின் கூர்ச்சத்தை பாத்திரத்தின் எந்த இடத்தில் வைக்கவேண்டும்?

பதில் 17: நீங்கள் கிழக்கு பார்த்து உட்கார்ந்து இருப்பீர்கள். காருணீக பித்ருக்களின் கூர்ச்சம் பாத்திரத்தில் மேற்கு திசை முடிவில் இருக்கவேண்டும். கிழக்கு திசையில் உங்களுடைய பெற்றோர்களின் 1 அல்லது 2 கூர்ச்சங்கள் இருக்கும். சுருக்கமாக சொன்னால் பாத்திரத்தின் மேல் பக்கம் பெற்றொர்கள் கூர்ச்சம் மற்றும் கீழே காருணிக பித்ருக்களின் கூர்ச்சம். பெற்றோர்களுக்கு 2 கூர்ச்சம் வைத்தால், காருணிக பித்ருக்களின் கூர்ச்சத்தை மேலே கூரியபடியோ அல்லது இரண்டு கூர்ச்சங்களுக்கு நடுவேயோ வைக்கலாம்.

இந்த மிக உயர்ந்த சடங்கான மஹாளயத்தை பொதுவாக புரிந்துகொள்ள முக்கியமான 16 கேள்விகளுக்கு மேலே பதில்களை விளக்கிருக்கிறோம்.
வேத கோஷம் அமைப்பில் நாம், நமது பண்டைய ரிஷிகள் சூத்திரங்களிள் பரிந்துரைக்கபடி துல்லியமான விவரங்களுடன், செய்ய வேண்டியவை, செய்யகூடாதவை போன்ற விஷயங்களை ஆழ்ந்த பொருளுடனும் தத்துவங்களுடனும் நமது நித்ய கர்ம அனுஷ்டானங்களை பலருக்கு போதித்து பயிற்சிகள் கொடுத்துக்கொண்டு இருக்கிறோம்.
நாங்கள் நடத்தும் சில பயிற்சி முகாம்கள் மற்றும் ஆன்லைன் வகுப்புகள் நித்யகர்மாக்கள்
  • 1. ஸந்த்யாவந்தனம்
  • 2. ப்ரஹ்மயஞ்யம்
  • 3. புண்டற தாரண விதி ( வீபூதி/நாமம்)
  • 4. ஸ்னான விதானம்
  • 5. வ்ரத அனுஷ்ட்டானம் ஸாஸ்திரபடி பண்டிகைகள் கொண்டாடும் விதம் தேவதா பூஜைகள் தர்பணங்கள்,
மற்றும் பல பயிற்சிக்கு ஆர்வமுள்ளவர்கள் தங்கள் விவரங்களை (பெயர், வயது, வசிக்கும் இடம், கோத்திரம், வேதம், சூத்ரம், பயிற்சி பெற வேண்டிய தலைப்பு) மின்னஞ்சல் மூலம் எங்களுக்கு அனுப்பிவைக்கவும்.
Email: vedaghosham@gmail.com
YouTube: www.youtube.com/c/vedaghosham
Twitter: www.twitter.com/vedaghosham
Instagram: www.instragram.com/vedaghosham

Comments are closed.